வங்கிகளில் உழவர் கடன் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூர்,ஜூலை 24: வங்கிகளில் உழவர் கடன் அட்டை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், தங்கள் நிதிதேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வங்கிகள் மூலம் கிசான் கிரெடிட் கார்டுகள் (உழவர்கடன்அட்டைகள்) வழங்கப்படுகின்றன. இந்த கடன்அட்டை அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.உழவர்கடன்அட்டைகளைவிவசாயிகள்பயிர்சாகுபடிசெய்வதற்கும், கால்நடைவளர்ப்பிற்கும், மீன்வளர்ப்பிற்கும்பெற்றுக்கொள்ளலாம். பயிர்சாகுபடி பரப்பளவு மற்றும் கால்நடைவளர்ப்பு குறித்து, மூலதனத்தின் அளவுக்கேற்ப கடன்அட்டைகள் வழங்கப்படுகின்றன.இத்திட்டத்தின்மூலம்விவசாயிஒருவர்ஈட்டுறுதிஇல்லாமல் 1.60 இலட்சம்வரையிலும், நிலஈட்டுறுதிஅடிப்படையில் 3 இலட்சம்வரையிலும்கடன்பெற்றுக்கொள்ளளலாம்.உழவர்கடன்அட்டையின்காலஅளவு 5 ஆண்டுகளாகும். இந்த அட்டைகள் மூலம் கடன் பெற்று உரிய தவணை லத்தில் கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு, 4 சதவீதம் மட்டுமே சலுகை வட்டித்தொகையாக வசூலிக்கப்படுகிறது.எனவே உழவர்கடன்அட்டைபெறவிருப்பம் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து கொண்டு அருகில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி ஆதார்அட்டை, வங்கிசேமிப்புபுத்தகம், நிலஆவணங்கள் போன்றஆவணங்களை சமர்ப்பித்து கடன்அட்டையைபெற்று பயன்பெறலாம் என கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Related Stories: