தேவாலயங்கள் பழுதுபார்ப்பு நிதியுதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர்,ஜூலை 24: தமிழ்நாட்டில்சொந்தக்கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களைப்பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதிஉதவிவழங்கும் திட்டம் 2016-17ம்ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகள்: கிறித்துவதேவாலயம் 10 ஆண்டுகளுக்குமேலாகசொந்தகட்டடத்தில்இயங்கிஇருத்தல்வேண்டும். தேவாலயம்கட்டப்பட்டஇடம்பதிவுத்துறையில்பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும். தேவாலயமும்பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும்.தேவாலயத்தின்சீரமைப்புபணிக்காகவெளிநாட்டிலிருந்துஎவ்விதநிதிஉதவியும்பெற்றிருத்தல்கூடாதுஎன்றசான்றிதழ் (பிற்சேர்க்கை ) அளிக்கவேண்டும். சீரமைப்புப்பணிக்காக ஒருமுறைநிதிஉதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்குமறுமுறைநிதிஉதவி 5 ஆண்டுகளுக்குப் பின்னர்வழங்கப்படும்.விண்ணப்பப்படிவம்மற்றும்சான்றிதழ்இணையதளமுகவரில்www.bcmbcmw@.tn.gov.in - ல்வெளியிடப்பட்டுள்ளது. னைபதிவிறக்கம்செய்துவிண்ணப்பிக்கலாம். விண்ணப்பபடிவத்தைஅதிலுள்ளசேர்க்கையில் உள்ளவாறு பூர்த்திசெய்துஅனைத்துஉரியஆவணங்கள்மற்றும்சான்றிதழ்களோடு கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டர் தலைமையிலான குழுவினரால் அவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கிறித்தவதேவாலயங்களைதரஆய்வுசெய்து, கட்டடத்தின்வரைபடம் மற்றும்திட்டமதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வுசெய்து உரியமுன் மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நலஆணையருக்கு நிதிஉதவி வேண்டி கலெக்டரால் பரிந்துரைசெய்யப்படும். நிதிஉதவி இருதவணைகளாகதேவாலயத்தின்வங்கிக்கணக்கில்மின்னணுபரிவர்த்தனைமூலம்செலுத்தப்படும். மேலும்கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதிஉதவி பெற்று பயன்பெறலாம் என கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Related Stories: