நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்த சிறப்பு பயிற்சி

பெரம்பலூர்,ஜூலை24:

பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 255பேருக்கு புதிய பாடத்திட்டங்கள் குறித்த 3கட்ட சிறப்புப் பயிற்சி நேற்று(23ம்தேதி) தொடங்கியது.பெரம்பலூரில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்மூலம் பெரம்பலூர் ஒன் றியத்திற்குட்பட்ட அனைத்துத் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 255பேருக்கு 2,3,4,5 வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் குறித்த சிறப்புப் பயிற்சி வகுப்பு 3கட்டங்களாக அளிக்கப்படுகிறது. இதன்படி முதல்கட்டமாக (23,24 தேதிகளிலும்) நேற்றும், இன்றும் சிறப்புப்பயிற்சி அளிக்கப்படுகிறது. 2ம்கட்டமாக வரும் 25,26தேதிகளிலும், 3ம்கட்டமாக 29,30தேதிகளிலும் சிறப்புப்பயிற்சிகள் நடத்தப்படு கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்கள் அளவில் இந்தப்பயிற்சிகள் நடத்தப்படுகிறது. இதில் பெரம்ப லூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பெரம்பலூர் வட்டாரவளமைய அலுவலகம் மற்றும் பெரம்பலூரிலுள்ள ஊராட்சி ஒன்றி யத் தொடக்கப்பள்ளி(மேற்கு) வளாகத்திலும் நடக்கிறது. இப்பயிற்சிகளை வட்டாரக் கல்விஅலுவலர் செந்தாமரைச்செல்வி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி, மாவட்டஒருங்கிணைப்பாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் பெரம்பலூர் மாவட் டக் கல்விஅலுவலர் மாரிமீனாள் தலைமைவகித்து பயிற்சிகளைத் தொடங்கிவைத்தார்.இதில் 2,3,4,5ம் வகுப்புகளுக்கான புதியபாடப்புத்தகங்கள் குறித்த முதல்கட்டப் பயிற்சிவகுப்பில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95பேர் கலந்துகொ ண்டனர்.இப்பயிற்சியில் புதிய பாடத்திட்டம் குறித்த நிறை,குறைகள் மற்றும் அதிலு ள்ள பிழைகளைத் திருத்தம்செய்தல் குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்டன.வட்டார வள மைய ஆசிரியர்பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருத்தாளர்களாக இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

Related Stories: