காலனிக்காக தங்களது நிலத்தை அரசுதுறையினர் ஆக்கிரமிப்பு: நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை நடவடிக்கை வேண்டாம் பாதிக்கப்பட்டோர் கலெக்டரிடம் மனு

பெரம்பலூர்,ஜூலை23:காலனிக்காக தங்கள்நிலத்தை தாசில்தார் உள்ளிட்ட அர சுத் துறையினரே ஆக்கிரமித்துவிட்டார்கள். நீதிமன்றத் தீர்ப்புவரும்வரை நடவடிக்கை வேண்டாம் என மேட்டுபாளையத்தில் பாதிக்கப்பட்டோர் கலெக்டரிடம் புகார்மனு அளித்துள்ளனர்.பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.கூட்டத்தில், பெரம்ப லூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை, ஜெயராமன், முத்துசாமி,நடராஜன் உள்ளிட்டோர் கலெக்டரிடம் அளித்தப் புகார்மனுவில் தெரிவித்திருப்பதாவது :பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டைதாலுகா, மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் எங்களது பட்டாநிலங்களை மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கால னிக்காரர்கள் காலனிக்கு ஒதுக்க வேண்டுமென கேட்டு வருகிறார்கள். மேட்டுப்பாளையம் கிராமத்திற்கு ஏற்கனவே 10ஏக்கரில் காலனி போட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. காலனி யில் அனைவரும் குடியிருக்கிறார்கள். பாதி பேர் காலனி பெயரில் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட நிலங்களை பிறரிடம் விற்று விட்டனர். பாதி வீடுகள் கட்டாமல் உள்ளது. ஏற்கனவே காலனிக்கென நாங்கள் வழங்கிய நிலம் போக, மேலும் 10ஏக்கர் காலனிக்காக ஒதுக்க வேண்டும் என்கிறார்கள். இது எந்தவிதத்தில் நியாயம். ஒரு ஊருக்கு ஒருமுறைதான் காலனிநிலம் தருவார்கள். நிறைய ஊர்களில் காலனிநிலம் கொடுக்காமலே இருக்கிறது.எனவே மேட்டுப்பாளையம் கிராமத்தில் 2018ம்வருடம் பணிபுரிந்த மணியார்,தலையாரி, தாசில்தார் ஆகிய மூவரும், எங்கள்நிலத்தின் பட்டாஎண், சிட்டாவில் உள்ள பட் டாநெம்பர் அனைத்தையும் எடுத்துவிட்டனர். சிட்டா போட்டுப்பார்த்தால், எங்கள் நிலத் தின் பட்டாநெம்பர் சிட்டாவில் வரவில்லை.எங்களிடம் 2013ம்வருடம் வரைக்கும் சிட்டா, பட்டா எல்லாம் எங்களிடம் இருக்கி றது. ஆகவே மேட்டுப்பாளையம் கிராமத்தில் வேலைபார்த்த மணியார் முத்துசாமி, மேட்டுப்பாளையம் தலையாரி தங்கதுரை, வேப்பந்தட்டை தாசில்தார் ஆகிய இவர்கள் தான் எங்கள் நிலத்தின் பட்டாநெம்பர் சிட்டாவில் இல்லாமல் எடுத்து நிலத்தை நத்த மாக்கி விட்டனர். ஆகவே எங்கள் நிலத்தின்மீதான வழக்கு சென்னை உயர்நீதி மன் றத்தில் நடந்துவருவதால்,அதற்கான தீர்ப்புவெளியாகும்வரை, எங்கள் நிலத்தின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. மேலும் எங்கள் நிலத்தை எங்களுக்கு பட்டா சிட்டா எல்லாம் எங்கள் பெயருக்கே மாற்றிக்கொடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: