வடக்குமாதேவி கிராமத்தில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியும் போதிய வகுப்பறை கட்டிட வசதி இல்லை

பெரம்பலூர், ஜூலை 23: வடக்குமாதேவி கிராமத்தில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 6 ஆண்டுகளாகியும் போதுமான கட்டிட வசதி இல்லாததால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். வடக்குமாதேவி கிராம பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டர் சாந்தாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அதில் வடக்குமாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு 2013 அக்டோபர் 4ம் தேதி முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் 140 பேர் படித்து வருகிறார்கள். ஆனால் இங்கு மாணவர்கள் படிப்பதற்கு கட்டிட வசதியில்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்திலும், மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராம புல எண் 628/3என்ற எண்கொண்ட மந்தை புறம்போக்கு நிலத்தை நத்தம் இடமாக மாற்றி வடக்குமாதேவி அரசு உயர்நிலைப்பள்ளிக்கென, பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரது பெயரில் மாற்றி தருமாறு கேட்டு கொள்கிறோம்.

எனவே தாங்கள் வடக்குமாதேவி ஊரிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இடத்தை வழங்கி கட்டிடம் கட்ட ஆணை பிறப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் கிராம பொதுமக்களின் தீர்மான நகல், கிராம சான்று, வருவாய் வட்டாட்சியரின் கடிதம், அடங்கல், வரைபட நகல்களை இணைத்து கொடுத்துள்ளனர். இதைதொடர்ந்து மனுவை பெற்று கொண்ட கலெக்டர் சாந்தா, சம்மந்தப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் மனுவடக்குமாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு 2013 அக்டோபர் 4ம் தேதி முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் 140 பேர் படித்து வருகிறார்கள். ஆனால் இங்கு மாணவர்கள் படிப்பதற்கு கட்டிட வசதியில்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

Related Stories: