சிறுதானியங்களில் நார்சத்து அதிகமாக இருப்பதால் உணவு செரிமானத்தன்மையை எளிதில் கட்டுப்படுத்துகிறது

நீடாமங்கலம்,ஜூலை24: சிறுதானியங்களில் நார்சத்து அதிகமாக இருப்பதால் உணவு செரிமானத்தன்மையை எளிதில் கட்டுப்படுத்துகிறது என நீடாமங்கலத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் சமநிலை வளர்ச்சி நிதி திட்டத்தின்கீழ் காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறுதான்யங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி கொரடாச்சேரி ஒன்றியம் திருக்களம்பூர் கிராமத்தில் நிலைய ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமையில் நடந்தது.அப்போது அவர் சிறுதானியங்களை பயிரிடுதலின் அவசியத்தையும், சந்தை படுத்துதல் குறித்து பேசுகையில், சிறுதானியங்களில் நார்சத்து அதிகமாக இருப்பதால் உணவு செரிமானத்தன்மையை எளிதில் கட்டுப்படுத்துகிறது. நார்சத்து உடலில் பிரி பியாடிக் செயல்பட்டு ஆரோக்கியமான மகத்தான நோய் எதிர்ப்பு திறன் உடைய பாக்டீரியாக்களை குடலில் தக்க வைத்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. சிறுதானியங்களில் உயர்புரதம்(15சதம்)அதிகம் இருப்பதால் எலும்பு வலிமையாக இருப்பதற்கு உகந்தது என்றார். கொரடாச்சேரி வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார்,நிலைய மண்ணியியல்துறை உதவி பேராசிரியர் அனுராதா,உழவியல்துறை பயிற்சி உதவியாளர் வாணி,பண்ணை மேலாளர் நக்கீரன் ஆகியோர் சிறுதானியங்களின் நன்மைகள் ,பயிரிடும் முறைகள் குறித்து பேசினர். இதில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மண்புழு உரம் மற்றும் சூடோமோனாஸ் வழங்கப்பட்டது.நிலைய திட்ட உதவியாளர் ரேகா நன்றி கூறினார்.

Related Stories: