நாளை கடைசி திருத்துறைப்பூண்டி நகரப்பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு அபாயம்

திருத்துறைப்பூண்டி, ஜூலை24: திருத்துறைப்பூண்டி வேதை பைபாஸ் சாலையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு பிரியும் சாலையில் மழை நீர் தேங்கிநிற்பதால் சுகார சீர்கேடு ஏற்படும் நிலைஉள்ளது. எனவே மழை நீர் தேங்கி இருப்பதை வெளியேற்ற வேண்டும் என்று பொது மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.திருத்துறைப்பூண்டி வேதை பைபாஸ் சாலையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு பிரியும் சாலையில் மழை நீர் தேங்கிநிற்பதால் சுகார சீர்கேடு ஏற்படும் நிலைஉள்ளது.இதுகுறித்து இந்த பகுதி முன்னாள் கவுன்சிலர் முத்துக்குமரன் கூறுகையில், நகர பகுதிகளில் மழை நீர் வடிகால் தூர்ந்து போனதால் இந்த இடம் மற்றும் பொதுப்பணி துறை அலுவலகம் அருகில், அண்ணா சிலை அருகில், காசு கடை தெரு, அரசு மருத்துவமனைக்கு செல்லும் அணுகு சாலைபோன்ற பகுதிகளில் மிதமான மழைக்கு தண்ணீர் தேங்கி நிற்கும். எனவே வரும் மழைகாலத்திற்கு முன்பாக மழை நீர் வடிகால்களை சரி செய்து சாலையிலும், தெருக்களிலும் தண்ணீர் தேங்காமலிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: