பணிகள் பாதிப்பால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர் 2017-18ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை உடனே வழங்க வேண்டும்

மன்னார்குடி, ஜூலை 24: 2017 - 18 ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வெங்காத்தான்குடி, வேதபுரம், சிங்கமங்கலம் கிராம விவசாயிகள் கலெக்டரிடம் நேரில் மனு அளித்து வலியுறுத்தினர்.கோட்டூர் ஒன்றியம் வெங்காத்தான்குடி, வேதபுரம், சிங்கமங்கலம் கிராம விவசாயிகளுக்கு 2017 - 18 ம் ஆண்டுக்குரிய பயிர் காப்பீட்டிற்கான தொகையை உடன் வழங்க வலியுறுத்தி 3 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், துணை தலைவர் ரவி ஆகியோர் தலைமையில் திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு அளித்த கோரிக்கை மனுவின் விபரம், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்காத்தான்குடி, நல்லூர், ஒரத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கான இசட் 85 நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கம் நல்லூரில் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் மேற்கண்ட சங்கத்தில் முறைப்படி 2017 - 18 ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு பிரீமியத் தொகையை விதிகளுக்கு உட்பட்டு செலுத்தியுள் ளோம்.தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கிக்குட்பட்ட கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு மேற்கண்ட ஆண்டிற்கான பயிர் இழப்பீட்டு தொகைகள் வழங்கப்பட்ட நிலையில் வெங்காத்தன்குடி ஊராட்சிக்குட்பட வெங்காத்தன்குடி, வேதபுரம், சிங்கமங்கலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு மட்டும் பயிர் இழப்பீட்டு தொகையை அரையும் குறையுமாக வழங்கப் பட்டு ள்ளது. பெரும்பகுதியான விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை இதுவரை வழங் கப் படவில்லை. கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் இம்மாதிரியான நடவடிக்கைகள் விவசாயிகள் மீதான அக்கறையின்மையும், பொறுப்பற்ற தன்மையையும் காட்டுவதாக இருக்கிறது. இது கூட்டுறவு சங்க நிர்வாகத்தின் மீது விவசாயிகளுக்கு அவ நம்பிக்கையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே கலெக்டர் இப்பிரச்னையில் நேரிடையாக தலையிட்டு சட்டப்படி விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய 2017 - 18 ம் ஆண்டிற்கான பயிர் இழப்பீட்டு தொகையை உடனடியாக பெற்று தந்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் விவசாயிகள் குறிப்பிட்டு ள்ளனர்.

Related Stories: