5 மாவட்ட பள்ளி, கல்லூரி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை கடைக்கார்களுக்கு டிஐஜி எச்சரிக்கை

திருச்சி, ஜூலை 24: ஐந்து மாவட்ட பள்ளி, கல்லூரி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களுக்கு திருச்சி சரக டிஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இயங்கி வரும் பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள கடைகளில் அரசால் தடை விதிக்கப்பட்ட சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. மேலும் பள்ளி, கல்லூரி இருக்கும் இடத்தில் 100 அடி தூரத்திற்கு சிகரெட் மற்றும் புகையிலை விற்பனை செய்யக்கூடாது, வைத்திருக்கவும் கூடாது.இந்த விதிமுறைகளை மீறி யாரேனும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் மாணவர்கள் மற்றும் இளம்சிறார்களுக்கு சிகரெட், புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் கடை உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுத்து கடைக்கான உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: