3 பேருக்கு வலை நாகை மீனவ கிராமங்களில் பைபர் படகுகளை அதிகாரிகள் ஆய்வு

நாகை, ஜூலை24: நாகை மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் உள்ள பைபர் படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.மீன்வளத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்குள் செல்வதற்கு முன்பு விசைப்படகுகள் ஆய்வு செய்யப்படும். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்துறை சார்பில் நாகை மாவட்டத்தில் உள்ள 53 மீனவ கிராமங்களில் உள்ள பைபர் படகுகள் ஆய்வு செய்யப்படும். இதன்படி நேற்று நாகை மாவட்டத்தில் மீன்வளத்துறை சார்பில் பைபர் படகுகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் 40 குழுக்களாக பிரிந்தனர். ஒவ்வொரு குழுவிலும் தலா 2 பேர் வீதம் ஒவ்வொரு பைபர் படகுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது பைபர் படகுகளின் நீளம், அகலம், அதில் பொருத்தப்பட்டுள்ள இஞ்சின் வேகம், படகுகளில் செல்வோர் பயன்படுத்தும் வாக்கிடாக்கி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள், படகு உரிமையாளர் பெயர், படகு பதிவு பெற்றுள்ளதா? பதிவு எண், யார் பெயரில் படகு பதிவு பெற்றுள்ளது என்பது உட்பட அனைத்தையும் ஆய்வு செய்தனர்.இதேபோல வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Related Stories: