அரவக்குறிச்சி திருமாணிக்கம்பட்டியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

அரவக்குறிச்சி . ஜூலை 24: கரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் நிர்மல்சன் உத்தரவின் பேரில் நடைபெற்ற இம் மருத்துவ முகாமை மலைக்கோவிலூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஆசாத் அலி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.இம்முகாமில் பொதுமக்களுக்கு சிறுநீர் பரிசோதனை, ரத்தப் பரிசோதனையில் சர்க்கரையின் அளவு, ஹீமோகுளோபின், கொழுப்புச் சத்து, டிரைகிளிசரைடு போன்றவைகளும் காசநோய் கண்டறியும் சளிப் பரிசோதனை, மலேரியா ரத்த தடவல், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறியும் பாப் ஸ்மியர் பரிசோதனை, ஸ்கேன், ஈசிஜி, கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.மருத்துவர்கள் கவுசல்யா, ஜெய, சரவணன், ராஜ வர்ஷிணி, தாரிணி, தேவிகா, பிரியா உள்ளிட்ட அரசு மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். சித்த மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. கண்கள் மற்றும் பிறவி குறைபாடு உள்ளவர்களுக்கு மேற் பரிந்துரை செய்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 219 ஆண்கள் 388 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 712 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.முகாம் ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேது குற்றாலம், சுகாதார ஆய்வாளர்கள் கருப்புச்சாமி, குழந்தைவேல், அழகுராஜா, ஊராட்சி செயலர் கலையரசன், பகுதி மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு இணைந்து செய்திருந்தனர்.

Related Stories: