கரூர் அருகே துணிகரம் டெக்ஸ்ைடல்ஸ் ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை, பணம் திருட்டு

கரூர், ஜூலை 24: கரூர் அருகே டெக்ஸ்டைல்ஸ் ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி ெசன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் அருகே உள்ள நரிக்கட்டியூர் பகுதியில் வசிப்பவர் ரமேஷ்(57). டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார். ஈரோட்டிற்கு சொந்த வேலையாக சென்றவர் நேற்றுமுன்தினம் காலை வீட்டிற்கு வந்தார். வீட்டுக்கதவு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே ெசன்று பார்த்தபோது பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தங்க நகைகள் 7 பவுன், வெள்ளி பொருட்கள், அரை கிலோ, ரொக்கப்பணம் ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கஞ்சா விற்ற 2 பேர் கைது: கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்ற கரடிசேகர் மகன் பாபு(29) என்பவரை டவுன் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கரூர் மார்க்கெட் அருகே ஒயிட்டான்(எ) பாலகிருஷ்ணன் விற்பனைக்காக 400 கிராம் கஞ்சாவை கொண்டு சென்றபோது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வழிப்பறி வழக்கில் 4 பேர் கைது: கரூர் காளியப்பனூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டீக்கடையில் செல்லதுரை என்பவரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ.350 பணம் பறித்த தினேஷ்குமார்(26), உதயகுமார்(36), பிரபாகரன்(24) ஆகியோரை தாந்தோணிமலை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று ராமானூர் சாலையில் பசுபதிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்த மாரிமுத்து(26) என்பவர் நின்று கொண்டிருந்தபோது, அவரிடம் கத்தியைக்காட்டி ரூ.200 பணம் பறித்த மாரியப்பன்(57) என்பவரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது: கரூர் கொளந்தாகவுண்டனூர் ஒயின்ஷாப் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட சுரேஷ்,(43), நாகராஜன், சதீஷ்குமார், ஹரிஹரன் ஆகியோரை பசுபதிபாளையம் போலீசார் கைதுசெய்தனர், மேலும் அவர்களிடம் இருந்து ரூ.4730 பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.டிப்பர் லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது: க.பரமத்தி  காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் நேற்று வாகன சோதனை நடத்தினார். கோவை  சாலை காட்டுமுன்னூர் பேருந்து நிறுத்தம் அருகே 2 டிப்பர் லாரிகளில் தலா  4 யூனிட் மணல் அனுமதியின்றி திருட்டுத்தனமாக ஏற்றி வந்தது தெரிய வந்தது.  வாகன ஓட்டுனர்கள் விசுவநாதபுரி பாஸ்கர்(44), பொரணி கும்மாளப்பட்டி  முத்துராஜா(24) ஆகியோரிடம் விசாரித்தபோது தளவாப்பாளையம் காவிரி  ஆற்றுப்படுகையில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்ததை ஒப்புக்கொண்டனர்,  இதனையடுத்து உரிமையாளர் கவுசிக் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில்  பாஸ்கர் கைது செய்யப்பட்டார். மற்றொரு வழக்கில் முத்துராஜா, லாரி  உரிமையாளர் செல்வராஜ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு முத்துராஜா  கைது செய்யப்பட்டார். இதுபோன்று மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி பாண்டியராஜன் எச்சரிக்கை  விடுத்துள்ளார். இது தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும்  தெரிவித்துள்ளார்.

Related Stories: