புகளூர் வாய்க்காலை தூர்வார வேண்டும் பாசன கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மனு

கரூர், ஜூலை 24: புகளூர் நதி நிரேற்றுப் பாசனக் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:நீர் ஏற்று நிலையம் புகளூர் நதி நீர் ஏற்றுப்பாசனம் மூலம் செயல்பட்டு வருகிறது. சங்கம் 1969ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. எங்களின் நீர் உந்து ஏற்ற நிலையம் மூலம் 160 ஏக்கர் பாசனங்கள் செயல்பட்டு வருகிறது.நீரேற்று நிலையத்திற்கு புகளூர் வாய்க்காலில் தளவாப்பாளையம் முதல் கிழக்கு தவிட்டுப்பாளையம் ரோட்டில் கல் பாலத்தில் இருந்து கிழக்கு கடைமடை வரை வாய்க்கால் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. எனவே இரண்டு கரைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை பார்வையிட்டு அதனை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

மாற்று திறனாளி மனு:கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நாகராஜ் என்பவர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் aநடைபெற்று வருகிறது. இந்த கூட்டங்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பங்கேற்க வேண்டும். இல்லையெனில் நேர்முக உதவியாளர் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில், பொதுமக்கள் கோரிக்கை சம்பந்தமாக வழங்கும் மனுக்கள் துறையின் கவனத்துக்கு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.இதே போல் ரெங்கநாதன்பேட்டை பகுதியை சேர்ந்த ஞானசேகர் என்பவர் வழங்கிய மனுவில் கரூர் ஒன்றியம் நெரூர் தென்பாகம் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில், முதியோர் உதவித்தொகை பெற, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள எண், முத்திரை ஆகியவற்றை வழங்கும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: