தென்காசியில் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தென்காசி, ஜூலை 24: தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செய்யது சுலைமான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இக்பால் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ, மாநில அமைப்பு செயலாளர் நெல்லை அப்துல்மஜீத், மாநில துணை செயலாளர் முகம்மது இஸ்மாயில் ஆகியோர் பேசினர். மாநில இளைஞர் லீக் தலைவர் செய்யது பட்டாணி, தென்மண்டல இளைஞரணி செயலாளர் பாட்டப்பத்து கடாபி, மாவட்ட இளைஞர் லீக் தலைவர் டாக்டர் நவாஸ்கான், புளியங்குடி அப்துல்வகாப், சாகுல்ஹமீது, தென்காசி நகர தலைவர் அபுபக்கர், மாநில பேச்சாளர் முகம்மது அலி, அப்துல்காதர், மாகின்அபுபக்கர், ரிசவுபக்கீர், கவிஞர் கமால், புளியங்குடி சாகுல்ஹமீது உட்பட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இக்கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தும் மற்றும் கடையநல்லூரில் தாலுகா அலுவலகத்தை நகரின் மையப்பகுதியில் அமைக்க பாடுபட்ட முகம்மது அபுபக்கர் எம்எல்ஏவிற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

புளியங்குடியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். கடையம் யூனியனை தரம் உயர்த்தி தென்காசி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டுகளை வரைமுறைப்படுத்தியதில் முஸ்லிம் பகுதியில் குளறுபடிகள் அதிகமாக உள்ளது. இதனை நிவர்த்தி செய்து சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் வார்டுகளை மாற்றி அமைக்க வேண்டும். தென்காசி மாவட்ட மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறைைய சரிசெய்து தகுதிவாய்ந்த மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்க அரசு முயற்சிக்க வேண்டும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: