மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூலை 24: மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தூத்துக்குடியில் இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியூ மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து தலைமை வகித்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் ரசல், மாவட்ட இணைச் செயலாளர் அப்பாதுரை, துணைத்தலைவர் மணவாளன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். சாமானிய மக்களுக்கு எதிராக மத்திய பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை களைய உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: