வேலூரில் பறக்கும் படை சோதனை காரில் கொண்டு சென்ற 1.57 லட்சம் பறிமுதல்

வேலூர், ஜூலை 24: வேலூரில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் காரில் கொண்டு சென்ற ₹1.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மக்களவை தேர்தல் வரும் 5ம்தேதி நடக்க உள்ளது. இதனையொட்டி 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்றுமுன்தினம் மாலை வெளியிடப்பட்டது. தேர்தல் விதிகளை, தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பறக்கும்படையினர், நிலைக்கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வேலூர் கிரீன்சர்க்கிள் அருகே பறக்கும்படை அதிகாரி கவியரசன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரில சோதனையிட்டனர். அப்போது ₹99 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை. எனவே பறக்கும்படையினர் ₹99ஆயிரத்தை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதேபோல் நேற்றுமுன்தினம் இரவு வேலூர் செல்லியம்மன் கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ₹58ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர். மொத்தம் ₹1.57லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: