வேலூர், ஆம்பூரில் துணை ராணுவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு கலெக்டர், எஸ்பி பங்கேற்பு

வேலூர், ஜூலை 24: வேலூர், ஆம்பூரில் துணை ராணுவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். வேலூர் மக்களவை தேர்தல் வரும் 5ம்தேதி நடக்கிறது. பறக்கும் படையினர், நிலைக்கண்காணிப்பு குழுவினர் தேர்தல் நடத்தை விதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தேர்தலையொட்டி 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 179 பதற்றமான வாக்குச்சவாடிகள் உட்பட 850 வாக்குச்சாவடிகளில் வெப்கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்கும் விதமாகவும், அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக 20 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்காக வரவழைக்கப்படுகின்றனர். இந்நிலையில் வேலூர் சைதாப்பேட்டையில் துணை ராணுவத்தினர், போலீசாரின் கொடி அணிவகுப்பு நேற்று காலை நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் கொடியசைத்து அணிவகுப்ைப தொடங்கி வைத்தார். எஸ்பி பிரவேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் திருமால், பார்த்தசாரதி, அழகுராணி ஆகியோர் பங்கேற்றனர்.

சைதாப்பேட்டையில் தொடங்கிய அணிவகுப்பு அண்ணா கலையரங்கம் அருகே முடிந்தது. பின்னர் முள்ளிப்பாளையத்தில் தொடங்கி கொணவட்டம் வரையில் நடந்தது. இதில் 144 துணை ராணுவத்தினர், 86 போலீசார் உள்பட மொத்தம் 230 பேர் பங்கேற்றனர். அதேபோல் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையில் ஆம்பூர் பஸ் நிலையத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு நடத்தினர். ஊர்வலம் ஆம்பூர் பஸ் நிலையத்தில் தொடங்கி தேசிய நெடுஞ்சாலை, நேதாஜி ரோடு, பஜார், கஸ்பா ஏ, மந்தகரை, கஸ்பா பி, உமர்ரோடு, பைபாஸ் சாலை வழியாக சென்றது. இதில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருடன் ஆம்பூர் சரகத்திற்குட்பட்ட போலீசார் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: