புலிக்குத்தி கிராமத்தில் தொற்றுநோய் ஏற்படுத்தும் கழிவுநீர்

சின்னமனூர், ஜூலை  23:  சின்னமனூர் அருகே புலிக்குத்தி கிராமத்தில் சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சின்னமனூர் அருகே போடி மாநில நெடுஞ்சாலையில் புலிக்குத்தி கிராமம் உள்ளது. இங்கு சுமார்  7 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். விவசாயம் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசி்ககின்றனர்.புலிக்குத்தி கிராமத்தின் மெயின்சாலையில் இருபுறங்களிலும் சாக்கடை வாய்க்கால்கள் செல்கின்றன. இந்த சாக்கடையின் மேல் உள்ள பாலம் உடைந்து பாலத்தில் விழுந்ததால் சாக்கடை கழிவுநீர் மாநில நெடுஞ்சாலையில் 20 நாட்களுக்கு மேலாக ஓடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இப்பிரச்னை குறித்து புலி குத்தி ஊராட்சி நிர்வாகத்திலும், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும்  பொதுமக்கள் புகார் செய்தும் நடவடிக்கை எடுப்படவில்லை. சுகாதாரக்கேட்டில் சிக்கியுள்ள புலிக்குத்தி மக்களை தொற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: