மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை: விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம், ஜூலை 23: அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே, தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரித்தது. பொதுமக்கள் வெளியே தலை காட்ட முடியாமல் தவித்தனர். மேலும், கடும் வெயிலால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் வற்றி பாலைவனம் போல் காட்சியளித்தது.

பொதுமக்கள் இரவில் தூக்கமில்லமல், மொட்டை மாடிகளிலும், வீட்டின் கதவுகளை திறந்து வைத்தும் தூங்கினர். ஆனாலும், புழுக்கம் தாங்க முடியாமல் தவித்தனர். இதையொட்டி பல்வேறு கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தென்மாவட்டங்களில் ஓரளவு பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை வடமாவட்டங்களுக்கு ஓரளவை மழைப்பொழிவைத் தரும். இதைதொடர்ந்து, கடந்த சில நாட்ககளாக காஞ்சிபுரத்தில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மேக மூட்டத்துடன் இருந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணி முதல் லேசான மழை, சாரலாக இருந்தது. இதேபோல் திருப்போரூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாமல்லபுரம், கல்பாக்கம், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர் உள்பட காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

அடைந்தனர்.அதே நேரத்தில், சாரல் மழையால் நிலத்தடி நீர் சேரும் என்றும், சற்று வேகமாக மழை பெய்தால் குளங்கள், ஏரிகளில் தண்ணீர் நிரம்பி விவசாயிகளும் பயனடைவார்கள் என எதிர் பார்க்கின்றனர்.

Related Stories: