கோயில் கல்வெட்டு உடைத்து அகற்றம் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு

விருதுநகர், ஜூலை 23: வத்திராயிருப்பு அருகே, நல்லதங்காள் கோயிலில் இருந்த கல்வெட்டை உடைத்து அகற்றி, புதிய கல்வெட்டு வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

வத்திராயிருப்பை அடுத்த அர்ச்சனாபுரம், அணைக்கரைப்பட்டி கிராமங்களுக்கு அருகே நல்லதங்காள் கோயில் உள்ளது. இக்கோயில், அணைக்கரைப்பட்டி, அர்ச்சனாபுரம், மதுரையில் உள்ள ஒண்டிமுத்து வகையாறாக்களுக்கு பாத்தியப்பட்டது என நீதிமன்ற தீர்ப்பு உள்ளது.இது தொடர்பாக கோயிலின் சுவரில் வடகிழக்கு பகுதியில் கடந்த 3.9.2006ல் கல்வெட்டு வைக்கப்பட்டது. இந்த கல்வெட்டை கடந்த 14.6.18ல் உடைத்து அப்புறப்படுத்தி அர்ச்சனாபுரம் கிராம பொதுமக்கள், மதுரை பாண்டிய வேளாளர் சமூக பங்காளிகள் மற்றும் நன்கொடையாளர்களான பொதுமக்களுக்கு பாத்தியப்பட்டது என புதிய கல்வெட்டை பதித்துள்ளனர்.கோயில் கல்வெட்டில் அணைக்கரைப்பட்டி என்ற பெயரிலுள்ள கல்வெட்டை உடைத்து நீக்கி, புதிய கல்வெட்டை மோசடியாக வைக்க அர்ச்சனாபுரத்தில் சிலர் உதவி செய்துள்ளனர். இது தொடர்பாக 14.6.18ல் வத்திராயிருப்பு போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் பழைய கல்வெட்டை வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: