ராம்கோ குரூப் நூற்பாலை பணியாளர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி உதவித்தொகை

ராஜபாளையம், ஜூலை 23: ராம்கோ குரூப் நூற்பாலைகளில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ‘இலவச கல்வி உதவித்தொகை’ வழங்கப்படுகிறது. இதன்படி, இந்தாண்டு ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட்டில் கடந்த 20ம் தேதி மாலை ராம்கோ குரூப் நூற்பாலை பணியாளர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   சுமார் 1656 தொழிலாளர்கள் தங்களுடைய குழந்தைகளுடன் கலந்து கொண்டு,

கல்வித் உதவித்தொகையாக ரூ.26 லட்சம் வரை பெற்று சென்றனர். இந்த விழாவில் என்.மோகனரெங்கன் முதன்மை இயக்க அலுவலர், என்.நாகராஜன் இணை துணைத்தலைவர்-மனிதவளம் ஆகியோர் கலந்து கொன்டு, கல்வி உதவித் தொகையை வழங்கினர்.   இதில், தொழிற்சங்கத்தின் சார்பாக, என்.கண்ணன் எச்.எம்.எஸ் பொதுச்செயலாளர், ஆர்.கண்ணன், ஐஎன்டியூசி தலைவர், பி.கே.விஜயன் ஏஐடியூசி பொதுச்செயலாளர் மற்றும் தொழிற்சங்கப் பிரதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: