குழந்தைகளிடம் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும் கல்வி மாவட்ட அதிகாரி அறிவுரை

காரைக்குடி, ஜூலை 23:காரைக்குடி அருகே சின்னவேங்காவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்வி சீர் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியை ராஜாமணி

வரவேற்றார். விழாவில், தேவகோட்டை கல்வி மாவட்ட அதிகாரி சாமி சத்தியமூர்த்தி தலைமை வகித்து பேசுகையில், ‘‘அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் இப்பள்ளி தலைமையாசிரியை, ஆசிரியர்கள் முயற்சியில் 112 பேர் படிப்பது பாராட்டக்கூடியது. தனியார் பள்ளியை விட சிறந்த ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு அரசு பள்ளியில்தான் உள்ளது. குழந்தைகளிடம் பெற்றோர் அதிக நேரம்  மனம் விட்டு பேசினால் தான் கல்வி அறிவில் சிறந்து விளங்குவார்கள்’’ என்றார். விழாவில் முன்னாள் மாணவர் தொழிலதிபர் ஜெயபிரகாஷ் ரூ.1.50 லட்சத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கினார். கிராம பொதுமக்கள் சார்பில் புரவலர் நிதி வழங்கப்பட்டது. விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் சகாயசெல்வன், ஆலீஸ்மேரி, முன்னாள் ஊராட்சி தலைவர் கருப்பையா, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் அன்பரசு பிரபாகர், வட்டார தலைவர் ரங்கசாமி மற்றும் பள்ளி ஆசிரியைகள் சுமித்ரா, ஜெயலட்சுமி, வள்ளியம்மை, ரோசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் புஷ்பலதா நன்றி கூறினார்.

Related Stories: