தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் தவ்கித் ஜமாத் வலியுறுத்தல்

தொண்டி, ஜூலை 23: தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு தவ்கித் ஜமாத் செயல்வீரர்கள் கூட்டம் தொண்டியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமீஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செய்யது நெய்னா, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் உட்பட அனைத்து பகுதியிலும் தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் செய்து, தொண்டியில் செப். 5ம் தேதி ரத்ததான முகாம் நடத்துவது, 10 ஆயிரம் மரக்கன்று நடுவது, குளங்களை தூர்வாருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில செயலாளர் பாருக், செங்கோட்டை பைசல், மாநில தணிக்கை குழு தலைவர் பனைக்குளம் அப்துல் ஹமீது, தீவிரவாத எதிர்ப்பு குறித்து பேசினர். மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி பேசுகையில், இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாதத்தை ஏற்றது இல்லை. தீவிரவாத செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. தீவிரவாதம் எதிர்ப்பு குறித்து பட்டி தொட்டியெல்லாம் பொதுமக்களிடம் எடுத்து சொல்லும் விதமாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இனி வரும் காலம் மழை காலம் என்பதால் தவ்கித் ஜமாத் சார்பில், 10 ஆயிரம் மரக்கன்று நட்டு அவற்றை பராமரிக்க வேண்டும். அரசு பள்ளி கூடங்களை சுற்றிலும் உள்ள அசுத்தங்களை அகற்ற வேண்டும். பொதுமக்களின் நலன் பயக்கும் அனைத்து செயல்களிலும் தவ்கித் ஜமாத்தினர் ஈடுபடவேண்டும் என்றார். மாவட்ட துணை தலைவர் ஜாபர் நன்றி கூறினார்.

Related Stories: