சாலை பணிக்கு வரத்து கால்வாய் மூடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்

ராமநாதபுரம், ஜூலை 23: கண்மாயின் வரத்துக் கல்வாய் மூடப்பட்டு சாலை பணிகள் நடக்கிறது. தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தனபாலன் தலைமையில், ஏராளமான விவசாயிகள் அளித்துள்ள மனுவில், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் மூலம் 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை நேரடியாகப் பெற்று வருகின்றன. மேலும் சுற்றியுள்ள 72 சிறிய கண்மாய்களும் பாசனத்துக்கான தண்ணீரை ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயிலிருந்து செல்கிறது. இந்நிலையில், நகரம் ஊராட்சியில் பனிதிவியல் முதல் அனிச்சகுடி கோவில் வரை சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. அனிச்சகுடி கோவில் அருகே சுமார் 120 அடி வரை ஆர்எஸ்.மங்கலம் கண்மாய்க்கு வரும் அரசரடி வண்டல் வரத்து கால்வாயை மூடும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வரத்து கால்வாயை மூடுவதால் கண்மாய் மற்றும் பாசனத்துக்கு வரும் தண்ணீர் தடுக்கப்படும். இதனால் அப்பகுதி விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. கால்வாயை மூடாதவாறு சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

Related Stories: