அளவுக்கு அதிகமாக மண் ஏற்றி செல்லும் லாரிகளால் ஆபத்து

ஆர்.எஸ்.மங்கலம். ஜூலை 23: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது. இந்த பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து செல்வதால், பின்னால் வரும் டூவீலர் ஓட்டிகளும், பாதசாரிகளும் விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது. திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கப் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்கான பணியில் ஏராளமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சாலையை சமப்படுத்துவதற்காக ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியிலும் மண், ஜல்லி போன்றவை குவிக்கப்பட்டு அங்கிருந்து பணி நடைபெறும் இடங்களுக்கு ஏராளமான லாரிகள் மூலம் எடுத்துச் செல்ல படுகிறது. இவ்வாறு எடுத்துச் செல்லும் லாரிகளில் அளவுக்கு அதிகமாக மண் ஏற்றிச் செல்வதால், தற்போது அடிக்கும் காற்றினால் மண் தூசிகள் பறக்கப்பட்டு ஒரே புழுதி புகையாக வருகிறது. இதனால் சாலையில் பின்தொடர்ந்து வரும் டூவீலர் வாகன ஒட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் கண்களில் பறந்து விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது. எனவே இந்நிலை தொடர்ந்தால் ஏதேனும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் இதனை தடுத்து நிறுத்தும் வகையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: