சாலைகளில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அதிகரிக்கும் அபாயம்

திருப்பூர், ஜூலை 23: திருப்பூர் வளம் பாலம், ஈஸ்வரன் கோவில் வீதி, யூனியன் மில் ரோடு, நொய்யல் வீதி, அறிவொளி ரோடு மற்றும் காங்கயம் ரோடு பகுதிகளில் காலை, மாலை நேரங்களில், எருமை மாடுகள், கன்றுக்குட்டிகள் ரோட்டில் திரிகின்றன. வாகனங்களுக்கு மத்தியில் புகுந்துவிடும் கால்நடைகள், மெதுவாக நடந்து செல்கின்றன. ரோட்டோரங்களை ஆக்கிரமித்து, படுத்து கொள்கின்றன. சில இடங்களில் சுற்றித் திரியும் நாய்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி, காயமடைகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை காங்கயம் ரோட்டில், போக்குவரத்து அதிகம் இருந்த நிலையில், நடுரோட்டில் இரண்டு மாடுகள் வந்தன. இதில் ஒரு மாடு அந்த வழியாக வந்த பள்ளி பஸ் மீது மோதியது. இதில் பஸ்சின் படிகட்டு அருகில் இருந்த கம்பி உடைந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது. இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கும் வகையில், போக்குவரத்து போலீசார் கண் காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: