ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக நடுநிலைப் பள்ளி இடம் மாற்ற முடிவு

திருப்பூர், ஜூலை23: திருப்பூர் மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பழைய பஸ்நிலையம் ஒரு பகுதியாக பழைய பஸ்நிலையமும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதற்காக, அருகில் உள்ள முத்துப்புதூர் பள்ளியை வேறு இடம் மாற்ற திட்டமிட்டுள்ளனர். முத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று  வருகிறார்கள். இந்த பள்ளி சுமார் 70 ஆண்டுகளாக பழைய பஸ் நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின், அருகில் உள்ள ஏழை மாணவர்கள் பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்நிலையில், பழைய பஸ் நிலையம் கட்டமைப்பு பணிக்காக பள்ளியை வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளதாகவும், பள்ளி கட்டிடம் இடிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுமே என மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தா கூறியதவது: இந்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அந்த பள்ளியை வேறு இடத்துக்கு மாற்றுவது என்பது முடியாத காரியம். இந்த பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க முடியாது. எனவே மாணவர்கள் இதே பள்ளியில்தான் படிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த கல்வி ஆண்டு முடிவதற்குள் பள்ளிக்கு வேறு இடம் பார்த்து விடுவோம். அங்கு பள்ளியை மாற்ற முடிவு செய்துள்ளோம். அதன் பின்னர் அங்கு பள்ளி தொடர்ந்து செயல்படும் என்றார்.

Related Stories: