போட்டித்தேர்வுக்கான சிறப்பு வகுப்பு

திருப்பூர், ஜூலை23:போட்டித்தேர்வுகளான நீட், ஜெ.இ.இ. போன்றவற்றில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் இன்னும் சிறப்பு வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து, கல்வி அதிகாரிகள் கூறுயது:  திருப்பூர் மாவட்டத்தில் 13 இடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்டு முதல் வாரத்தில் இருந்து வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். பயிற்சி அளிக்க உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்.

Related Stories: