தனியார் நிறுவனம் ரூ.33 லட்சம் மோசடி நடவடிக்கை கோரி மனு

திருப்பூர்,  ஜூலை23:  திருப்பூரில், ரூ.33 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது  நடவடிக்கை கோரி சிறு தொழிலாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு  அளித்தனர்.திருப்பூர், பிரிட்ஜ்வே காலனியைச் சேர்ந்த வேல்சாமி உள்ளிட்ட  10க்கும் மேற்பட்டோர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: நாங்கள்  திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சிறு தொழில் செய்கிறோம்.  இந்நிலையில், சென்னையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஓபோடேப் இ  சொல்யூசன் எனும் தனியார் நிறுவனத்தின் விற்பனையாளரான முகமது ரபீக் எங்களை  அணுகினார்.ஆன் லைன் மூலமாக பணம் பரிமாற்றம், இ ரீசார்ஜ் ஆகியவை செய்து  வருவதாகவும், முகவர்கள் (டிஸ்டிபியூட்டர்) ஆக சேர்ந்தால் நல்ல லாபம்  கிடைக்கும் என்றார். இதை உண்மை என்று நம்பி கடந்த ஜனவரி 17ம் தேதி முதல்  டிஸ்டிபியூட்டராக இணைந்தோம். இந்நிலையில், சில நாட்களில் அந்த நிறுவனத்தின்  இணையதளம் இயங்காமல்  போனதால் ரூ.33 லட்சம் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக  சம்மந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது பணம் கொடுக்காமல்  காலம் தாழ்த்தி வருகின்றனர். ஆகவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி   எங்களது பணத்தை மீட்டுத்தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Stories: