பண்டிகை கொண்டாட நடவடிக்கை எடுக்க கோரி கீழ்குந்தா கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ஊட்டி, ஜூலை 23:   நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் தங்களுக்கு என்ற ஒரு பாரம்பரியத்தை கடை பிடித்து வருகின்றனர்.ஹட்டிகள் எனப்படும் கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள்மேற்குநாடு, குந்தை, பொரங்காடு, தொதநாடு என நான்கு சீமைகளாக பிரித்து வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு சீமையும் குறிப்பிட்ட சில கிராமங்களை உள்ளடக்கியதாகும்.ஒவ்வொரு சீமைகளுக்கும் ஒரு தலைவர் இருப்பார்கள். அவரது கட்டுப்பாட்டிலேயே கிராம மக்கள் ெசயல்படுவது வழக்கம். இந்நிலையில், குந்தை சீமை 14 கிராமங்களை உள்ளடக்கியது. இந்த சீமையின் தலைவர் பதவி தற்போது அரசியல் தலையீட்டல் பெரும் பிரச்னைக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், ஆண்டு தோறும் நடக்கும் தெவ்வப்பா எனப்படும் அறுவடை திருவிழாவின் போது, யார் தலைமையில் பண்டிகை மற்றும் பூஜை நடத்துவது என்பதே இப்பகுதி மக்களின் பிரச்னையாக உள்ளது. இரு தரப்பினரும் தங்களது தலைவர்களின் தலைமையில் நடத்த போகிறோம் என அறிவிப்பது, வெவ்வேறு தேதிகளை அறிவிப்பது போன்ற அறிவிப்புக்களால் மக்கள் குழம்பி உள்ளனர். மேலும் சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டாக தெவ்வப்பா பண்டிைகயை கீழ்குந்தா கிராமத்தில் விமர்சையாக கொண்டாட முடியாமல் எளிமையாக கொண்ட வேண்டிய கட்டாயத்திற்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  இம்முறை கொண்டாடப்படும் தெவ்வப்பா பண்டிகையின் போது அரசியல் தலையீடு இருக்க கூடாது. அதிகாரிகளை ஆளுங்கட்சியினர் மிரட்டக் கூடாது, அதிகாரிகள் ஆளுங்கட்சியினரின் கட்டளைக்கு அடிப்பணியக் கூடாது என வலியுறுத்தி அன்னமலை முருகேசன் தலைமையில் கீழ்குந்தா மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 இதுகுறித்து அன்னமலை முருகேசன் கூறியதாவது: நாங்கள் தொன்று தொட்டு தெவ்வப்பா பண்டிகையை கொண்டாடி வருகிறோம். கடந்த பல ஆண்டுகளாக இவ்விழா கீழ்குந்தா கிராமத்தில்  விமர்சையாக நடந்து வந்தது. ஆனால், சில அரசியல் தலையீட்டால் கடந்த மூன்று ஆண்டாக விழா கொண்டாடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது அதிமுக., மாவட்ட செயலாளராக உள்ள புத்திசந்திரன் தனது அரசியல் லாபத்திற்காக சிலரை தலைவராக தேர்ந்தெடுத்து ெகாண்டு எங்களது கிராமத்தில் பண்டிகை கொண்டாட விடாமல் தடுத்து வருகிறார்.  எனவே, இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.  என்றார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து இது தொடர்பான மனுவையும் அளித்தனர்.

Related Stories: