திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

ஊட்டி, ஜூலை 23:  ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.  இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில், குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 212 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.      இதை தொடர்ந்து, நடந்த கூட்டத்தில் திறன் விழிப்புணர்வு வார நிகழ்ச்சி தொடர்பாக பள்ளி, கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட்ட திறன் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, தற்காலிக இயலாமையிலுள்ள உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, தனித்துணை ஆட்சியர் கண்ணன். கலால் உதவி இயக்குநர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முகம்மது குதுரதுல்லா, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: