சாய கழிவுநீரை வெளியேற்றிய தொழிற்சாலையை மூட உத்தரவு

பெருந்துறை, ஜூலை 23: பெருந்துறையில் சாய கழிவுநீரை வெளியேற்றிய தொழிற்சாலையை மூட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படாத சாய கழிவுநீரை வெளியேற்றியதாக வந்த புகாரை அடுத்து நேற்று முன்தினம் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஆய்வு செய்ததில் அங்கு கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் நிலத்தில் வெளியேற்றியது தெரியவந்தது. தேங்கிய நீரில் சோதனை செய்த போது சுமார் 6000 டிடிஎஸ் அளவுக்கு மாசு இருந்ததும் கண்டறியப்பட்டது. இந்த தொழிற்சாலையை மூடவும் மின் இணைப்பை துண்டிக்கவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: