மக்கள் குறை தீர்க்கும் முகாம் மனுக்கள் குவிந்தன

கோவை, ஜூலை 23:  கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள், பல்வேறு தரப்பினர் தங்களது மனுக்களை கொடுத்தனர்.மகாத்மா காந்திஜி இளைஞர் நரிக்குறவர் நற்பணி சங்கம் அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டம் திம்பம்பாளையம் புதூர், மருதூர் கிராமம் காரமடை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் பல மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இப்பள்ளியில் நரிக்குறவர் இனத்தை சார்ந்த 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தாலும், பள்ளி முன்பு சாலை உள்ளதாலும் பள்ளிக்குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடுத்துள்ள மனுவில், கோவை மருதமலை சாலை லாலிரோடு சிக்னலுக்கு முன்பு மாரியம்மன் கோயில் எதிர்புறம் உள்ள சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது இந்த சாலை மூடப்பட்டது. இதுநாள் வரை திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தடாகம் சாலை வழியாக சுற்றி செல்கின்றனர். மூடப்பட்ட சாலையை திறக்க வேண்டும்.அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை தமிழ்நாடு சார்பில் தலைவர் மனுநீதிசோழன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேவேந்திர குல வேளாளர் இனம் எஸ்.சி.,பட்டியலில் உள்ளது. அதை எஸ்.சி., பட்டியலில் இருந்து நீக்கி, மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, ஆகிய உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குலவேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கையை மனுவாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகனிடம் அளித்தனர்.

  இது போல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர்.

Related Stories: