ஆணவ படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய்க்கு அரசு வேலை

கோவை, ஜூலை 23:  மேட்டுப்பாளையம் பகுதியில் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய்க்கு அரசு வேலைக்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேற்று வழங்கினார். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வர்ஷிணி பிரியா மற்றும் கனகராஜ் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த நிலையில், அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனகராஜின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஜூன் மாதம் இருவரையும் வெட்டி படுகொலை செய்தனர். தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வர்ஷிணி பிரியாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும், வர்ஷிணி பிரியாவின் தாய் அமுதா எஸ்.புங்கம்பாளையம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பெண்கள் விடுதியில் சமையலராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேற்று அமுதாவிடம் வழங்கினார்.

Related Stories: