பெண் பயணியிடம் ரகளை

கோவை, ஜூலை 23:   சேலம்த்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் வியாபார நிமித்தமாக கோவை வந்தார். பணியை முடித்து விட்டு நேற்று மதியம் தான் கொண்டு வந்த பாத்திரங்களுடன் கோவை ரயில்நிலையத்தில் இருந்து சேலம் செல்ல ரயிலில் ஏறினார். அப்போது டிக்கெட் பரிசோதகர் பத்மகுமார் மாரியம்மாளிடம் டிக்கெட் கேட்டுள்ளார். டிக்கெட் கணவரிடம் உள்ளது என்றும், அவர் முன்னே உள்ள ரயில் பெட்டியில் இருப்பதாகவும் மாரியம்மாள் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ரயில் பெட்டியில் இருந்து இறங்கிய அவர் தனது கணவரிடம் டிக்கெட்டை வாங்கி வந்து காண்பிப்பதாக கூறினா.  இதனால் ஆத்திரமடைந்த பத்மகுமார், பெண் பயணி கொண்டுவந்திருந்த பொருட்களை எட்டி உதைத்ததோடு, அவரை கடுமையாக திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து கேட்ட போலீசாரிடம் பத்மகுமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் அவரை சமாதனப்படுத்தி அழைத்துச்சென்றனர்.டிக்கெட் பரிசோதகரின் இந்த செயலால் சக ரயில்பயணிகள் கடும் அதிருப்தியடைந்தனர். மேலும், பெண் பயணியிடம் முறைகேடாக நடந்து கொண்ட டிக்கெட் பரிசோதகர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: