தவாக கொடியேற்று விழா; முத்துலட்சுமி பங்கேற்பு

காடையாம்பட்டி, ஜூலை 23: காடையாம்பட்டி வட்டத்தில் உள்ள பண்ணப்பட்டி பிரிவு, சரக்கப்பிள்ளையூர், தின்னப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, சந்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வீரப்பனின் மனைவியும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில பொறுப்பாளருமான  முத்துலட்சுமி கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்து பேசினார். மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். விழாவில் ஓமலூர் ஒன்றிய செயலாளர் அன்புராஜா, காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர் சேட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: