மோகனூர் அருகே கோயிலுக்குள் அனுமதி மறுப்பு

நாமக்கல், ஜூலை 23: மோகனூர் அருகே செவதாம்பாளையத்தைச் சேர்ந்த காளியப்பன் என்பவர், கலெக்டர் ஆசியா மரியத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:மோகனூர்  அடுத்த செவதாம்பாளையம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக,  அதே பகுதியை சேர்ந்த 4 பேர், எங்கள் மீது வழக்கு தொடுத்தனர். மேலும், 17 குடும்பங்களை சேர்ந்தவர்களை  அடித்து உதைத்தனர்.   மேலும், கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய எங்களை அனுமதிப்பதில்லை. திருவிழாவின் போது எங்களை ஒதுக்கிவைக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடியானது.  இதையடுத்து கடந்த 8ம் தேதி, மாரியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றோம். ஆனால் எங்களை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. எனவே, இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, எங்களை கோயிலுக்குள் செல்ல அனுமதி பெற்றுத்தர வேண்டும்.  இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Related Stories: