விவசாயிகள் வேளாண் கண்காட்சி

ஊத்துக்கோட்டை, ஜூலை 19: வேளாண்மை துறை சார்பில் எல்லாபுரம் விவசாயிகள் வேளாண் கண்காட்சிக்காக கோயம்புத்தூர் சென்றனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வட்டத்திலிருந்து  “ அட்மா “ திட்டத்தின் கீழ் மாநில அளவிலான 50 விவசாயிகள் கண்டுநர் சுற்றுலாவிற்கு   நேற்று முன்தினம் கோயம்புத்தூர் சென்றனர். அங்கு சென்ற விவசாயிகள் கோவை கொடிசியா வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் கண்காட்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.இந்நிகழ்ச்சியில், அட்மா திட்டத்தின் மூலம் இயற்கை விவசாய முறைகள் மற்றும் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த சுற்றுலா அமைந்தது.இந்த கண்டுநர் சுற்றுலாவிற்கு எல்லாபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் டிஜெ.பிரசாத் தலைமை தாங்கினார்.   வேளாண்மை இணை இயக்குநர்கள் சுரேஷ், பிரதாப்ராவ் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு)  பாண்டியன் கொடியசைத்து  தொடக்கி வைத்தார். சுற்றுலாவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் வேளாண்மை இயக்குனர் பிரசாத் செய்திருந்தார்.

Related Stories: