திருவள்ளூரில் தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு முகாம் 63.18 கோடியில் வங்கி கடன் உதவி

திருவள்ளூர், ஜூலை 19: திருவள்ளூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு முகாமில், 142 தொழில் முனைவோர், 367 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மொத்தம் 63.18 கோடி மதிப்பில் வங்கி கடனுதவிகளை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.திருவள்ளூரில் பல்வேறு வங்கிகள் சார்பாக கடன் வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. விழாவில், இந்தியன் வங்கி சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.23.33 கோடி, கனரா வங்கி சார்பில் 87 பயனாளிகளுக்கு ரூ.14.23 கோடி, பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1.09 கோடி, பரோடா வங்கி சார்பில் 7 நபர்களுக்கு ரூ.25.70 லட்சம், யூனியன் வங்கி சார்பில் 5 பேருக்கு ரூ.55 லட்சம் கடன் உதவியை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.தொடர்ந்து, இந்தியன் வங்கி பூந்தமல்லி மண்டலம் சார்பில், 367 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.23.73 கோடி கடனுதவிகளையும் அவர் வழங்கினார். இதில், இந்தியன் வங்கி செயல் இயக்குனர் எம்.கே.பட்டாச்சார்யா, கள பொது மேலாளர் சந்திரா ரெட்டி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வி.மணிவண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரம் ஞானமுத்து, பூந்தமல்லி மண்டல மேலாளர் எம்.வெங்கடேசன், துணை மண்டல மேலாளர் சி.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: