விபத்துக்களை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

மஞ்சூர், ஜூலை 18: விபத்துக்களை தவிர்க்க மாணவர்கள் பெற்றோர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.   மஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா நாள் நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது. மஞ்சூர் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா தலைமை வகித்தார். எஸ்.ஐ.சுதாகர், தலைமை ஆசிரியர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பிரசன்ணா வரவேற்றார்.  தொடந்து மாணவர்கள் மத்தியில் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா பேசியதாவது, நீலகிரி   மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அறிவுறுத்தலின் பேரில் நேற்று விபத்தில்லா நாள் கடைபிடிக்கப்பட்டது. வாகனங்களில் செல்லும்போது விபத்துகள் ஏற்படாமல் பயணம் செய்ய வேண்டும். விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பான பயணம் குறித்து மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும். 18 வயது நிரம்பாமல் இரு சக்கர வாகனம் உள்பட எந்த ஒரு வாகனங்களையும் மாணவ, மாணவிகள் இயக்கக் கூடாது. இரு சக்கர வாகனம் இயக்க தகுதியுடையோர் ஓட்டுனர் உரிமம் பெற்று இயக்குவதுடன் கட்டாயம் ஹெல்மெட் அனிய வேண்டும். நீதிமன்ற உத்தரவுபடி இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அனிவது கட்டாயமாகும் என்றார்.  இதை தொடர்ந்து எஸ்.ஐ.சுதாகர் பேசும்போது, மாணவர்களுக்கு அரசு இலவசமாக சைக்கிள் வழங்குகிறது. மலைப்பாங்கான பகுதி என்பதால் சாலைகள் மேடும், பள்ளமுமாகவும் ெகாண்டை ஊசி வளைவிகள் அதிகம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் சைக்கிள்களில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: