ஹாக்கத்தான் போட்டியில் கிருஷ்ணா கல்லூரி வெற்றி

கோவை, ஜூலை 18: கோவையில் உள்ள கோவைப்புதூர் ஸ்ரீகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் அகில இந்திய அளவில் நடைபெற்ற ஹாக்கத்தான் போட்டியில் வெற்றிபெற்றுள்ளனர்.   மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் நடந்த ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் போட்டி நாடு முழுவதும் 18 மையங்களில் கடந்த 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், டெல்லியில் நடந்த போட்டியில் முதலிடத்தை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியின் தர்சன், கோகுல் பிரபாகரன், பாலாஜி, அக்ஷயா, கீர்த்தனா, ஹரிப்ரியா மற்றும் ஆசிரியர்கள் சதீஷ்குமார், சுரேஷ்குமார், பாண்டியன் மற்றும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரூபா ஆகியோர் பங்கேற்றனர்.  இதில் கிருஷ்ணா கல்லுாரி மாணவர்கள் வெற்றி பெற்று ரூ.1 லட்சம் பரிசு தொகை பெற்றனர். மேலும், பெங்களூரில் மத்திய அரசு, பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய தொழில்நுட்ப போட்டியில் ஒரே நேரத்தில் பல உணவுப்பொருட்களை தயாரிக்க உதவும் நவீன சாதனத்தை உருவாக்குவது தலைப்பில் கலந்து கொண்ட ஸ்ரீகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பிரகாஷ், விக்னேஷ்குமார், விக்னேஷ் மது, வம்சிதர், ஹாரிஸ் அபிஷேக் மற்றும் கீர்த்தனா ஆகியோர் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன், கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசன் ஆளவந்தார், துறைத்தலைவர்கள் கண்மணி, பிரதாப், ராஜங்கம் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: