மண்டல குத்துச்சண்டை போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவிக்கு தங்கப்பதக்கம்

திருவில்லிபுத்தூர், ஜூலை 18: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், ஆங்கிலத்துறை இறுதியாண்டு மாணவி அர்ச்சனா. இவர் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தை சேர்ந்த 15 மாணவியர், தேனியில் வி.என் அகாடமி சார்பில் மற்றும் மாவட்ட குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டனர். 150க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட போட்டியில், 19 முதல் 25 வயது வரையான பெண்களுக்கான 54 முதல் 55 கிலோ எடைப்பிரிவில், தெற்கு மண்டலப்பகுதி குத்துச்சண்டை போட்டியில் அர்ச்சனா முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். மேலும், மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.

இதேபோல, ஆடவர் பிரிவில் 19 வயதிலிருந்து 25 வயது வரை 75 முதல் 85 கிலோ எடைப்பிரிவில், தெற்கு மண்டலப்போட்டியில், கலசலிங்கம் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை இறுதியாண்டு மாணவர் சண்முகராஜா கலந்து கொண்டு இரண்டாமிடம் பெற்றார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு விஎன் அகாடமி இயக்குனர் வாஞ்சிநாதன், பயிற்சியாளர் நீலமேகம் ஆகியோர் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். கலசலிங்கம் பல்கலைக்கழக துணைவேந்தர் நாகராஜ், பதிவாளர் வாசுதேவன், பேராசிரியர் குருசாமி மற்றும் துறைத்தலைவர் ரமாதேவி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

Related Stories: