அரியலூர் - செந்துறை நெடுஞ்சாலை ஓரத்தில் கரை அமைக்கும் பணி தீவிரம்

செந்துறை,ஜூலை 18: அரியலூர்- செந்துறை நெடுஞ்சாலையில் இருப்பக்கத்திலும் கரை அமைக்கும் பணி அரியலூர் நான்கு ரோடு முதல் செந்துறை வரை நடைபெற்று வருகிறது.அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் ஆலை வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் பாதைகளில் அரியலூர் - செந்துறை சாலையும் ஒன்று. இந்த சாலையில் ஓரத்திலுள்ள கரைகள் மழை வெள்ளத்தில் கரைந்து பள்ளமாகியுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் ஒதுங்கும் போது விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் எஸ்பி சீனிவாசன் உத்தரவின் பேரில் இருபுறத்திறத்திலும் நெடுஞ்சாலை துறையினர் கரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் குறைக்கப்படும். மேலும் சிறிய ரக கார்கள் வாகனங்களுக்கு வழி விடவும் இது ஏதுவாக அமையும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: