‘100’ வேலை திட்டத்தை 200ஆக அதிகப்படுத்த வேண்டும்

பழநி, ஜூன் 26: நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகப்படுத்த வேண்டுமென பழநியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர்

வலியுறுத்தினர். ழநி பஸ்நிலைய ரவுண்டானா முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும். சம்பளத்தொகை ரூ.229ஐ முழுமையாக வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட  நாட்களை 200 நாட்களாக அதிகப்படுத்த வேண்டும். தேர்தல் கால விடுப்புடன் கூடிய சம்பளத்தை ஜாப் கார்டு உள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும். சின்னக்கலையம்புத்தூர்- நெய்க்காரப்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி- மானூர், நெய்க்காரப்பட்டி- பெருமாள்புதூர் சாலைகளை உடனடியாக அமைக்க வேண்டும். குடிநீர் பிரச்னைகளை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட சுகாதாமான குடிநீர் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். அனைத்து ரேசன் அட்டைகளுக்கும் பொருட்களை முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஒன்றிய செயலாளர் முருகசாமி மாவட்டக்குழு உறுப்பினர் துரைச்சாமி, ஒன்றியத் தலைவர் இருளாயி, பொருளாளர் முருகன், துணைச் செயலாளர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுபோல்  தொப்பம்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

*வேடசந்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நாகையகோட்டை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை கண்டித்தும், 100 நாள் வேலையை விவசாயிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும், குடிநீர் பிரச்னை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஊராட்சி துணை அலுவலரிடம் மனுவை அளித்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதில் சிபிஐ ஒன்றிய செயலாளர் முனியப்பன், முத்துச்சாமி, சவடமுத்து, துரைகண்ணன், முருகன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: