அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் குமுறல் திண்டுக்கல் நெட்டுத்தெருவில் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்

திண்டுக்கல், ஜூன் 26: திண்டுக்கல் நெட்டுத்தெருவில் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி 27வது வார்டுக்குட்பட்டது நெட்டுத்தெரு. இங்கு 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலும் மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களே வசித்து வருகின்றனர். இங்குள்ள அனைத்து வீடுகளில் இருந்தும் மனித கழிவுநீர் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் மூலமாக வெளியேற்றப்படுகிறது. இதனை சரியாக சுத்தம் செய்வதில்லை. இதனால் அடிக்கடி நிரம்பி வீட்டு வாசல், சாலைகளில் மனித கழிவுநீர் ஓடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், இதனை மிதித்து செல்பவர்களுக்கும் நோய் பரவும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: