‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் பட்டா வேணும் அய்யம்பாளையம், சித்தரேவில் குப்பைகளுக்கு தீ வைப்பால் சுவாச பிரச்னை

பட்டிவீரன்பட்டி, ஜூன் 25: அய்யம்பாளையம், சித்தரேவு பகுதிகளில் குப்பைகளை கிடங்கிற்கு கொண்டு செல்லாமல் சாலையோரம் கொட்டி தீ வைப்பதால் சுவாச பிரச்னைகள் ஏற்படுகிறது. தூய்மை பாரத இயக்கத்தின் திடக்கழிவு மேலாண்மை திட்டப்படி வீடுகள், தெருக்களில் சேகரமாகும் குப்பைகளை உரக்கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு அதை மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டம் பெயரவிற்கே செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக அய்யம்பாளையம் பேரூராட்சி, சித்தரேவு ஊராட்சியில் இந்நிலை அதிகம் உள்ளது.

இங்கு வீடுகள், தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை அய்யம்பாளையம்- சித்தரேவு மெயின்ரோட்டோரம் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொட்டி விட்டு தீ வைக்கின்றனர். இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதனால் காற்று மாசடைந்து குடியிருப்பு வாசிகளுக்கு சுவாச பிரச்னை ஏற்படுகிறது. மேலும் குப்பைகளில் இருந்து எழும் புகையால் வாகனஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக கிடங்கிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள், வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: