தாயை கொன்று மகன் தற்கொலை

ஈரோடு, மே 24: ஈரோடு சாஸ்திரிநகர் காமராஜ் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி அருள்மணி (60). இவர்களது மகன் ராஜேஷ் (33). பழனியப்பன் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கருவூலத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து ஓய்வுபெற்றார். இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அருள்மணி கடந்த சில ஆண்டாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகவே இருந்ததால் மகன் ராஜேஷ் உடனிருந்து கவனித்தார். எம்.காம். பட்டதாரியான ராஜேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இவருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணமானது. ஆனால் திருமணமான 2 மாதத்திலேயே மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால், ராஜேஷ் மதுப்பழகத்திற்கு அடிமையானார். மது அருந்த கூடாது என ராஜேஷை அவரது தாய் அருள்மணி கண்டித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜேஷ் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது அருள்மணிக்கும், ராஜேசுக்கும் தகராறு ஏற்பட்டது. மகனின் நடவடிக்கை குறித்து அருள்மணி அவரது தம்பியான ஈரோடு ஸ்டானி பிரிட்ஜ் பகுதியில் வசிக்கும் செந்தில்குமாரிடம்(45) கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ். அருள்மணியை தாக்கியதில் அவர் பரிதாபமாக இறந்தார். குடிபோதையில் தாயை கொலை செய்து விட்டோம் என்ற பதட்டத்தில், ராஜேஷ் தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தாயை மகனே கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாக்கும் எண்ணும் பணியில் அதிகாரிகள்

பாலக்காடு மற்றும் ஆலந்தூர் மக்களவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முண்டூரிலுள்ள ஆரியர்நெட் கல்வி நிறுவனத்தில் நேற்று நடந்தது. இதில் தேர்தல் அதிகாரிகள் வாக்கும் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.

Related Stories: