அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவில் ஆதார் எண் இணைக்க 27ல் சிறப்பு முகாம்

கோவை, மே 24:கோவை மாவட்டத்தை சேர்ந்த கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்கள் உறுப்பினர் பதிவில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேசன் கூறியிருப்பதாவது, கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது உறுப்பினர் பதிவில் ஆதார்  எண்ணை இணைப்பது  கட்டாயமாக்கப்படுள்ளது.

எனவே இதுவரை ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளவர்கள் தங்களது பதிவு அடையாள அட்டை நகல், ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை வரும் 27ம் தேதிக்குள் கோவை, ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் இயங்கிவரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

ஆதார் இணைப்பிற்காக பொள்ளாச்சி தொழிலாளர் உதவி ஆய்வர் அலுவலகம், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம், சோமனூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள சர்ச் கட்டிட வளாகம், சூலூர் மற்றும் கண்ணம்பாளையத்தில் உள்ள பஞ்சாயத்து கலையரங்கம் ஆகிய இடங்களில் வரும் 27ம் தேதி சிறப்பு ஆதார் இணைப்பு முகாம் நடக்கிறது. இதில் உறுப்பினர்கள் தங்களது அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம். இதுகுறித்த விபரங்களை பெற 0422-2324988 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: