10வது வெற்றியை பதிவு செய்த காங்கிரஸ்

புதுச்சேரி, மே 24: 1967ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை புதுச்சேரி மக்களவை தொகுதி ஒரு இடைத்தேர்தல் உட்பட 13 முறை நாடாளுமன்ற தேர்தலை சந்தித்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் 9 முறையும், திமுக, அதிமுக, என்ஆர் காங்., பாமக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மக்களை தொகுதிக்கு 14வது முறையாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் புதுவை மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சி தனது 10வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Related Stories: