கிருஷ்ணகிரி தொகுதியில் 9வது முறையாக காங். வெற்றி

கிருஷ்ணகிரி, மே 24:  கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி கடந்த 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போதில் இருந்து 8 முறை காங்கிரஸ் வேட்பாளர்கள், கிருஷ்ணகிரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சின்னபிள்ளையப்பா தோல்வியடைந்தார். தற்போது, போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி கடந்த 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று 13 மாதங்கள் எம்பியாக இருந்தார். ஆனால், இரண்டாவது முறையாக போட்டியிட்ட அவர், காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லகுமாரிடம் தோல்வியடைந்துள்ளார்.

Related Stories: